Navratri Sales Exhibition

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேலா 2018 நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை 08.10.2018 திங்கள்கிழமை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Advertisment

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவை மிகுந்த மற்றும் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கான தனி உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 04.11.2018 அன்று இந்த கண்காட்சி நிறைவடைகிறது. தினசரி காலை 10 மணி முதல் இரவு 09 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

Advertisment