ADVERTISEMENT

''ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்கு கிடைக்கவில்லை'' - அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

10:55 AM Feb 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிய நிலையில், குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனு, பிப்ரவரி 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே இது தொடர்பாக அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்குக் கிடைக்கவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவு பற்றிய ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT