ADVERTISEMENT

மருத்துவ பணியை தாண்டி மருத்துவரின் மனிதாபிமான உதவிகள்... நோயாளிகளின் பசியை போக்கும் முயற்சி...

05:35 PM May 03, 2020 | rajavel



கரோனா நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடெங்கும் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அமைப்ப சாரா தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஏழை மக்கள் பெரிதும் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான காசநோய் நோயாளிகள் உள்ளனர். இந்த நோய் உலகளவில் அபாயகரமானதாகும். இந்த நோய்க்கான சிகிச்சை முறையாக, சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவில்லையெனில் உயிரை பறித்துவிடும் தன்மை கொண்டது. இந்த நோய் தாக்கியவர்களின் உடல் சக்தியை இழந்துவிடும், எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதற்காக காசநோய் வந்தவர்களுக்கு அரசாங்கம்மே குறிப்பிட்ட ஒரு குறைந்த பட்ச தொகையை வாழ்க்கை நடத்த வழங்கி வருகிறது. அந்த தொகை போதாத நிலையில் சிலர் கூலி வேலைக்கு சென்றும் வருகின்றனர்.

தற்போது பொதுமக்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் காசநோயாளிகள் பலர் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த தகவல் திருவண்ணாமலை மாவட்ட காசநோய் பிரிவின் துணை இயக்குநர் மருத்துவர் அசோக் அவர்களின் கவனத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து, அரசு தரும் நிதியோடு, காசநோய் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முன்வந்து தந்த நிதியை கொண்டு தலா ஆயிரம் ரூபாய் செலவில் மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக 13 நோயாளிகளுக்கு அதனை வழங்கினர்.

அடுத்த கட்டமாக இன்னும் சிலருக்கு வழங்க வேண்டிய நிலையில் இருந்தனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கவனத்துக்கு சென்றது. மருத்துவ அதிகாரி, பணியாளர்களின் செயலை பாராட்டியவர், அவரது உத்தரவுப்படி, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா ஏற்பாட்டில், 17 காசநோய் நோயாளிகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை அரசின் சார்பில் வழங்க முன்வந்தார். 17 நோயாளிகள் வீட்டுக்கு மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் மரு.அசோக் மற்றும் மருத்துவர், ஊரக வளர்ச்சித்துறையினர் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உதவிகள் வழங்கினர்.

இதுப்பற்றி துணை இயக்குநர் மருத்துவர் அசோக் கூறியது, காசநோய் பாதித்தவர்கள் பலர் ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள். தற்போது அவர்களுக்கு எந்த வித வேலையும் கிடையாது, இதனால் உணவுக்கே கஷ்டப்படுகின்றனர். காசநோய்க்கு தரப்படும் மாத்திரைகள் அதிக சக்தி கொண்டது. அதை சாப்பிடும்போது அதிகளவு சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் உடலில் வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும், அவர்கள் சாப்பாடு சாப்பிட வழியில்லை என மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் விட்டால் இவ்வளவு நாள் அவர்கள் பெற்ற சிகிச்சை பலனில்லாமல் போய்விடும்.

இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு யோசித்தே, வறுமையில் உள்ள காசநோயாளிகள் குடும்பத்தார்க்கு உதவ முன்வந்தோம். எங்கள் துறையில் பணியாற்றும் சக பணியாளர்கள் ஒத்தொழைப்புடன் முதல் கட்டமாக உதவி செய்தோம். அதன்பின் மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்து வழங்குகிறது. இதுவரை மாவட்டத்தில் 30 காசநோயளிகள் பயன் அடைந்து உள்ளனர். இதுபோன்று வறுமையான காசநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவி பொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் காசநோய் பாதித்தவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று காசநோய் மாத்திரைகள் வழங்கும் பணி கடந்த ஒரு மாதமாகவே நடைபெற்று வருகின்றது என்றார்.

மருத்துவபணியை தாண்டி இப்படி மனிதாபிமானத்தோடு மருத்துவர்கள் பணியாற்றுவதால் தான் நம் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT