ADVERTISEMENT

'பெற்றோர்களிடம் நிதி வசூல் கூடாது...'-மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

05:08 PM Jun 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சில அறிவுத்தல்களுடன் கூடிய உத்தரவை கடிதம் வாயிலாக பிறப்பித்துள்ளார்.

அதில், 'தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்காக பள்ளிகள் வரும் ஜூன் 13 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகங்களைத் தூய்மைப்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க உரிய சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய காரணத்திற்காக பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்த நிதியையும் வசூலிக்கக்கூடாது. குறிப்பாக வகுப்பறையில் உள்ள கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசுதல், நாற்காலிகளுக்கு வண்ணம் பூசுதல், விளையாட்டு மைதானங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மீண்டும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளி வளாகத்திற்கு வரும்பொழுது பள்ளி கல்வி கற்பதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை உள்ள இடமாக இருக்க வேண்டும். பள்ளிகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட விவரங்களை சேகரித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT