ADVERTISEMENT

திமுக இளைஞரணியில் வயது வரம்பில் மாற்றம் செய்து, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

12:05 PM Aug 25, 2019 | santhoshb@nakk…

சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் பங்கேற்பு. இந்த கூட்டத்தில் பேசிய, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில் திமுக இளைஞர் அணியில் 15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து திமுக இளைஞரணி அமைப்பு மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்தபின், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும் என்பதையும் அறிவித்தார்.


மேலும் இந்த ஆண்டு செப்டம்பர் 14- ஆம் தேதி முதல் நவம்பர் 14- ஆம் தேதி வரை 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என நம் நிர்வாகிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று கூறினார். மாவட்டந்தோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், அரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை, தேசியக் கல்விக்கொள்கை வரையரையை திரும்ப பெற வேண்டும், தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும் இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT