ADVERTISEMENT

கனிமொழி தொடங்கிய தி.மு.க. மகளிர் அணியின் கல்வி அறக்கட்டளை! 

07:57 PM Mar 01, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69- வது பிறந்தநாளை முன்னிட்டு, 01/03/2022 அன்று, தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்களின் முயற்சியில் “தி.மு.க மகளிர் அணி கல்வி அறக்கட்டளை” தொடங்கப்பட்டது.


இந்த அறக்கட்டளையின் முக்கிய அம்சங்கள்:

இந்த அறக்கட்டளை, நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே, தேர்ந்தெடுக்கப்பட்ட 89 குழந்தைகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையை வழங்கியுள்ளது.

வரும் கல்வி ஆண்டிலிருந்து ஆண்டுதோறும், தி.மு.க. மகளிர் அணியினரின் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது உயர்கல்விக்கான உதவித்தொகையை வழங்க இருக்கிறது.

இந்த அறக்கட்டளையின் உதவியைப் பெற விரும்பும் மகளிரணியினர், நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களின் குறிப்புகள் சரிபார்க்கப்பட்டு, உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறுவதற்கு 500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பட்டியல் வெளியிடப்படும்.

“அனைவருக்கும் கல்வி என்ற திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில், கல்விச் சேவையில் தி.மு.க. மகளிர் அணி பெருமிதத்தோடு அடியெடுத்து வைக்கிறது” என்கிறார் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT