ADVERTISEMENT

ஆளுநர் வருகை: கருப்பு கொடி காட்டி சிறை செல்ல தயாராகும் தி.மு.கவினர்

09:43 AM Jul 20, 2018 | rajavel




ADVERTISEMENT

ADVERTISEMENT


தமிழக ஆளுநர் எங்கே சென்றாலும் அங்கு தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் கருப்புக் கொடி காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இனிமேல் கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். அதனால் ஆளுநர் செல்லும் வழியில் உள்ள சுத்தம் செய்யும் பணியும், பேருந்து நிலையம் பகுதியில் உடையும் நிலையில் உள்ள சுவர்களுக்கும், கழிவறைகளுக்கும் வண்ணம் தீட்டும் பணியும் தீவிரமாக நடந்தது.

ஆளுநர் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொருப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ, செல்லப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு கொடி காட்ட அனுமதி வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. செல்வராஜிடம் மனு கொடுத்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதுடன் கைது செய்யப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டது. அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் தி.மு.கவினர் கருப்புக் கொடி காட்டி கைதாக தயாராக உள்ளதாக கூறிவிட்டு வெளியேறினார்கள். அப்போது கைது செய்யப்படும் நபர்கள் சிறைக்கு அனுப்பவும் போலிசார் தயாராக உள்ளனர்.

இந்த தகவல் பரவியதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தி.மு.க வினரும் கைதாகி சிறை செல்ல தயாராக உள்ளதாக மாவட்ட கழகத்தில்ல் பெயர் பட்டியல் கொடுத்துள்ளனர். அதில் சுமார் 1200 பெயர்கள் உள்ளது. மேலும் பலர் இன்று கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல தயாராக மாற்று உடைகள், சாப்பாட்டு தட்டு, குவளை, போர்வை போன்றவற்றை பையில் எடுத்துவைத்துக்கொண்டு தயாராக உள்ளனர்.இந்த நிலையில் இன்று அரசு மகளிர் கல்லூரி வழியாக செல்லும் ஆளுநருக்கு எதிரே உள்ள திடலில் நின்று கருப்பு கொடி காட்ட தயாராகி உள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT