மின் கட்டண உயர்வு, மின் ரீடிங் எடுப்பதில் நடைபெற்ற குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வீடுகளின் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

மின் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கான இலவச மின் திட்டத்தை ரத்து செய்யும் புதிய மின்சார சட்டத் திருத்தம் போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று (ஜூலை21) திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளின் முன் கருப்புகொடி ஏற்றி, கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக,ஜூலை 16 அன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் உடனான இணையதள கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

Advertisment

இன்று (ஜூலை 21) திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்ட திமுகவை சேர்ந்த பலரும் தங்கள் இல்லங்களின் முன் கருப்புக்கொடியும், கண்டனப் பதாகைகளைஏந்தியும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படங்கள்: அசோக்குமார், ஸ்டாலின், குமரேஷ்