ADVERTISEMENT

தி.மு.க.வின் மீது வீண் பழி போடுகிறார்கள்... முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு பேட்டி!

10:31 PM Feb 12, 2020 | santhoshb@nakk…

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு இன்று நெல்லை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு பற்றிப் பேட்டியளித்தார்.

ADVERTISEMENT

"ராதாபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியின் ஐயப்பன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரோடு நான் ஒரு புகைப்படத்திலிருப்பதைப் பார்த்து தற்போதைய எம்.எல்.ஏ.வான தம்பி இன்பத்துரை அதைப் பெரிதாகக் காட்டி அமைச்சர் வரை கொண்டு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் வைத்துப் பேட்டி கொடுத்ததில் இது தி.மு.க.வின் காலத்திலிருந்தே நடைபெற்ற முறைகேடு அதைத் தான் நாங்கள் களை எடுக்கிறோம் என்று ஒரு தவறான செய்தியைப் பரப்பி தி.மு.க.வின் மீது வீண் பழி போடுகிறார்கள்.

ADVERTISEMENT

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்துப் பகுதியையும் நான் அறிவேன். அங்கெல்லாம் சென்றிருக்கிறேன். பல பேருடைய இல்ல விழா, நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்திருக்கிறேன். பல பேர்கள் என்னோடு போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதில் ஐயப்பன் என்பவர் படமும் எங்கே எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது. அவர் கட்சி உறுப்பினரும் கிடையாது அவரை நான் கூட்டிக் கொண்டு பல இடங்களுக்கு அலைந்ததும் கிடையாது. ஒரு சிறு குன்று மணி அளவு கூட, எனக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. என்னைப் பற்றி எல்லோரும் அறிவார்கள்.

1996 முதல் 25 ஆண்டு கால அரசியலில் நான் 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். தவறைத் தடடிக் கேட்பேனே தவிர, நான் ஒரு போதும் தவறுக்குத் துணை போனதில்லை. இந்த முறை நான் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் கூட, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று தடை போட்டுள்ளது.

ஆனால் எங்கள் தலைவர், என்னுடைய தம்பி உதய நிதியையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். தி.மு.க. தற்போது ஒரு பீரங்கி என்று அமைச்சரே சொன்னார். அதற்கு நான் நன்றி சொல்லணும். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ. இவர்களை வைத்துக் கொண்டு சொல்கிறேன். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுப் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் சுதந்திரமாக விசாரிக்க அனுமதிப்பார்களா? இதை எல்லாம் விடுத்துக் கால்நடைத்துறைக்கு புதிய வடிவம் கொடுக்கிறார்கள். இந்தத் தேர்வே ஊழல்தான்.


தமிழ்நாட்டில் படித்த பல லட்சம் இளைஞர்கள் வேலையைப் பொறுத்து நம்பிக்கை இழந்து விட்டார்கள். இது போன்ற முறைகேடுகளால் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். எனவே தேர்வு இனி மேல் நடைபெற வேண்டுமென்றால் தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் மேற்பார்வையில் நடைபெறவேண்டும் மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏ. வை வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். நான் தி.மு.க.வின் பிரச்சாரப் பீரங்கியாக செயல்படுவேன் என்றார்.

பேட்டியின் போது நெல்லை மாநகர தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் மா.செ. ஆவுடையப்பன், நெல்லை எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கு முன்னதாக நிருபர்களிடம் பேசிய ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை, "அப்பாவு தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் தனிமனிதத் தாக்குதல் நடத்தியிருக்கிறார் அது தவறு.

தவறராகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர் அப்பாவு. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகார் தொடர்பாக அப்பாவுவிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். என வலியுறுத்திய இன்பதுரை எம்.எல்.ஏ. விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT