ADVERTISEMENT

கரோனா நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒருமாத ஊதியம்!

12:54 PM May 14, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி, கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் வேண்டுகோளை தொடர்ந்து சிறுவர்கள், தங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்தப் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துவருகின்றனர். அதேபோல், ஐ.டி. தொழிற்துறையினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், நடிகர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கரோனா நிவாரண நிதியை இணையதளம் மூலம் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (14/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT