ADVERTISEMENT

''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்!

02:00 PM Aug 05, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வந்த நிலையில் நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்'' என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜகவின் கமலாலயத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் வருகை தந்துள்ளார். பாஜக அலுவலகத்தில் திறக்கப்பட்ட ராமர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் திமுக எம்.எல்.ஏ . கு.க.செல்வம். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவை விட்டு என்னை நீக்கினாலும் கவலை இல்லை” என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT