ADVERTISEMENT

ஐபேக் நிபுணர்களின் திறமைகளைப் பயன்படுத்துவது ஒன்றும் தப்பில்லையே! -கனிமொழி அளித்த விளக்கம்!

11:30 PM Dec 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரையின் இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணத்தை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மேற்கொண்டபோது, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தொகுதிகளில், ஐபேக் நிறுவனத்தின் ஆட்கள், உடன் வந்ததைப் பார்க்க முடிந்தது.

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் ‘ஐபேக்’ குறித்து கேள்வி எழுந்தபோது, விளக்கம் அளித்தார் கனிமொழி –

“ஐபேக் என்பது இந்தத் தேர்தலை முன்னின்று நடத்தக்கூடிய ஒரு நிறுவனம். அவர்களுடைய சேவையை ஒரு கூகுள் மீட்டிங் ஆக நடத்துகிறோம். பல விஷயங்களையும் நடத்துகிறோம். இதற்கெல்லாம், ஐபேக் மாதிரி நிறுவனங்களையும் அங்கங்கே கூப்பிட்டு, அங்கு பணியாற்றும் நிபுணர்களைக் கூப்பிட்டு, அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்துகிறோம். இதில் ஒன்னும் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால்.. எங்களுடைய அடிப்படை கொள்கைகள், திராவிட முன்னேற்ற கழகம் முன்னிறுத்தும் விஷயங்கள், தேர்தல் அறிக்கை, இவற்றிலெல்லாம் கழகம் எப்படி முன்னெடுக்குமோ, அதே விதத்தில்தான், அதிலிருந்து எள்ளளவு கூட மாறுபடாமல் செயல்படுகிறோம். தற்போது, ஸ்டாலினால் ஒரு முடிவு எடுக்கும்போது, திமுகவில் இருக்கின்ற மூத்த மாவட்ட செயலாளர்கள், அனுபவம் உள்ள கட்சிக்காரர்கள், தலைவர்கள்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும். வேறு யாரும் எனக்குத் தெரிந்து எடுக்கவில்லை.” என்றார் உறுதியுடன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT