ADVERTISEMENT

"சமூகநீதிப் பாதையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

10:47 PM Apr 12, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12/04/2022) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூகநீதிப் பாதையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும் ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் புதிய மாணவர் விடுதி அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் ரூபாய் 123 கோடியில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., உள்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ்.மதுமதி இ.ஆ.ப., தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய இயக்குநர் சுனில் குமார் பாபு, இணை இயக்குநர் அசோக் வரதன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT