ADVERTISEMENT

பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது தான் மோடியின் நூறு நாள் சாதனை- சீமான் பேட்டி!

01:51 AM Sep 12, 2019 | santhoshb@nakk…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவ, மாணவிகளுக்கான இந்தக் கல்விமுறையை நான் வெறுக்கின்றேன். இந்த அரசு பிள்ளைகள் எளிதாக படித்து வரக் கூடாது என நினைக்கின்றது. மாணவ, மாணவிகளுக்கு கல்வி எப்போதும் சுலபமாக இருக்க வேண்டும் சுமையாக இருக்கக்கூடாது. இந்தக் கல்வி முறையே தப்பாக இருக்கிறது. இதை எல்லாத்தையும் தீர்மானிக்கின்ற அமைச்சர்கள் இருக்கின்றார்களே, அவர்களுக்கு எந்த தகுதி தேர்வும் வைப்பது இல்லையே ஏன்? அப்படி வைத்திருந்தால் யாராவது ஒருத்தர் அமைச்சராக தேர்வு ஆயிருப்பார்களா?

ADVERTISEMENT


பெரு முதலாளிகள் பெற்ற லட்சக்கணக்கான கோடி கடனை தள்ளுபடி செய்ததின் காரணமாகத்தான் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளோம். விவசாயி பற்றி கவலைப்படாத தேசம் வாழாது. விவசாயத்தை கைவிட்ட நாடுகள் எல்லாம் பிச்சை எடுக்கிறது. இந்தியா வேளாண்மையை கைவிட்டு விட்டு சும்மா தொழில் வளர்ச்சி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதள பாதாள பொருளாதார வீழ்ச்சி தான் பிரதமர் மோடியின் 100 நாள் சாதனை. முதலாளிகளின் தலைவர்களாக செயல்படுகிறார்களே தவிர மக்களுக்கு சேவை செய்ய தலைவர்கள் இல்லை.

ADVERTISEMENT


திமுக ஆட்சியில் எத்தனை திட்டங்களுக்கு ஒவ்வொரு தடவையும் வெள்ளை அறிக்கை அளித்துள்ளீர்கள், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவோம். ஆனால் ஓராண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி என்ன பண்ணப் போகிறார்கள். அதனால உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒழுங்காக இல்லை, பிளாஸ்டிக் தடை சட்டம் என்று கொண்டுவர வேண்டும். மழைநீரை மக்கள் வீட்டில் சேமிக்கிறார்கள். நாட்டில் நீங்கள் எங்கு சேமிக்கிறீர்கள். மோட்டார் வாகன சட்டம் போட்டது சரிதான் சிக்னல் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அபராதம் விதிக்கிறது. ஏற்கனவே சுங்கச்சாவடி வாகன வரி சுமையாக இருக்கிறது. இதில் இப்படி சட்டம் போடுவது பெரிய சுமை மக்கள் 24 மணி நேரமும் பயந்து கொண்டே வாழ முடியாது என்றார் சீமான்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT