ADVERTISEMENT

இந்திய ஒற்றுமையை பாஜக சிதைத்துவிட்டது!  காங்., குற்றச்சாட்டு!!

07:31 AM Aug 06, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் மகிளா காங்கிரஸ் சார்பில் கொங்கர்குளத்தில் குடி மராமத்து பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT


அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ’’காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை பாஜக அரசு சிதைத்துள்ளது. இந்தியாவில் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மகாத்மா காந்தி மக்களை ஒன்றிணைத்தார். ஆனால் அதே கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மோடி மக்களை பிரித்தாளுகிறார்.



சுதந்திரம் பெற்ற இந்தியாவில் பண்டித ஜவகர்லால் நேரு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அந்த மாநிலத்தை உருவாக்கினார். காஷ்மீர் என்றும் நம்மை விட்டு போகாது. நமது நாட்டின் ராணுவம் வலிமையானது. அதை விட நமது நாட்டின் கொள்கை முடிவு பலமானது. காஷ்மீர் விவகாரத்தில் ஜவர்கலால் நேரு மீது தவறான கருத்தை பாஜக சித்தரிக்க முயற்சி செய்கிறது.

மேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்’’ என்று பேசினார்.

பின்னர் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார் நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT