ADVERTISEMENT

டீசல் விலை உயர்வு: 18ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

09:40 AM Jun 09, 2018 | Anonymous (not verified)


டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வரும் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்தகவலை அகில இந்திய தரை வழி சரக்கு போக்குவரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் சென்னையில் தெரிவித்தார்.

டீசல் விலை கடந்த 6 மாதங்களில் சுமார் ஆறரை ரூபாய் அதிகரித்துள்ளது, 3ம் நபர் காப்பீட்டுத்தொகை 40 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. இவற்றின் காரணமாக லாரி தொழில் நலிந்து வருகிறது. டீசல் விலையை குறைக்க அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

ADVERTISEMENT


இக்கோரிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தொடர் அழுத்தம் கொடுப்பததற்காக 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த உள்ளோம். இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT