auto

நாளை தமிழகம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ உட்பட எந்த ஆட்டோவும் ஓடாது என ஆட்டோ ஓட்டுனார்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை உயர்வைகண்டித்து நாளை நடைபெறவிருக்கும் பந்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே நாளை தமிழகம் முழுவதும்பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ உட்பட எந்த ஆட்டோவும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் இந்த பந்த்திற்கு தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாளை நடக்கவிருக்கும் இந்த பந்த்தில் 75 ஆயிரம் லாரிகள் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.