ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையை ஆய்வு செய்த டி.ஜி.பி. சுனில் குமார்! 

11:34 AM Nov 30, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், கைதிகளை விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

அதனடிப்படையில் விடுதலையாகும் கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், திருச்சி மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஜி.பி. சுனில் குமார் சிங் நேற்று (29.11.2021) காலை ஆய்வு செய்தார். அவரை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி வரவேற்றார். அதன்பிறகு சிறைக் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட டி.ஜி.பி. சுனில்குமார் சிறைக்குள் சென்று ஐ.டி.ஐ.-யைப் பார்வையிட்டார். மேலும், புதிதாக சிறைக்கு வந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளை ஆய்வுசெய்த பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT