ADVERTISEMENT

தனிப்படையினரை நேரில் அழைத்துப் பாராட்டிய காவல்துறை துணைத்தலைவர்!

06:27 PM Jan 24, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் தலைமையில் 7 காவலர்களை கொண்டு அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த இரண்டு மாதங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 14 குற்றவாளிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.7,35,000/- மதிப்புள்ள 147 ஆடுகளை மீட்டுள்ளனர். ஆடு திருடுவதற்காக பயன்படுத்திய 8 வாகனங்களை பறிமுதல் செய்யதுள்ளனர்.தனிப்படையினரின் இந்த சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ADVERTISEMENT

திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக திருச்சி சரகத்தில் ஒவ்வொரு உட்கோட்டத்திற்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரம்பலூர் உட்கோட்ட தனிப்படையினர் கொள்ளை வழக்கான பெரம்பலூர் காவல் நிலைய குற்ற எண் 1555/21 மற்றும் 8 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 1/2 சவரன் தங்க நகைகள், 464 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 60,000 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தின் மங்களமேடு உட்கோட்ட தனிப்படையினர் கொள்ளை வழக்கான கைகளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 202/21 மற்றும் 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 வெள்ளி கடவுள் சிலைகள் உட்பட ரூ 1,50,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். தனிப்படையினரின் இந்த சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சரக தனிப்படையினருக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அறிவுரை வழங்கினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT