ADVERTISEMENT

சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

04:54 PM Nov 09, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நடிகர் விஜய் நடித்த தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.


அதிமுகவினரின் போராட்டத்தால் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் சர்கார் படம் நிறுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களின் முன்பு போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் சர்கார் படத்தின் மறுதணிக்கை இன்று காலையில் நடைபெற்றது. சென்னையில் தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி தலைமையிலான குழுவினர் மறுதணிக்கை செய்தனர். அப்போது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை பணி நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று பிற்பகலில் திரையிடப்படும் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் இலவச பொருட்களை எரிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இலவச பொருட்களை எரிக்கும் காட்சியில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தோன்றியிருந்தார்.

அதேபோல் படத்தில் இடம்பெறும் ''பொதுப்பணித்துறை'' என்ற வார்த்தையும் ''56 வருடம் ''என்ற வார்த்தையும் ''கோமளவல்லி'' என்ற பெயரில் ''கோமள'' என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT