ADVERTISEMENT

ஒரே மாதத்தில் பல்லைக்காட்டும் ஒன்றரை கோடி ரூபாய் சாலை!!

02:19 PM May 03, 2019 | bagathsingh

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் அமைக்கப்படும் சாலைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி சுரண்டப்படுகிறது என்பதற்கு அந்த தார்சாலைகளே சாட்சியாக அமைகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே புதுக்கோட்டை - மீமிசல் பிரதான சாலையில் அழியாநிலை கிராமத்திலிருந்து பணக்கன்வயல் கிராமம் வழியாக கோங்குடி செல்லும் கிராம சாலையை 3.840 கி மீ. பிரதம மந்திரி திட்டத்தில் சீரமைக்க ரூ 1,44,6000 க்கு பாக்குடி கணபதி என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். அதில் சிறு பாலம் 2, தடுப்புச்சுவர் 7. அனைத்து பணிகளும் செய்யப்பட வேண்டும்.

இந்த பணிகள் எப்படி செய்ய வேண்டும் என்பதை விதிமுறைகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கப்பி 7.5 கனமீட்டர் என்று 2 முறையும் தார் 20 கன மீ அமைக்க வேண்டும். மேலும் கிராவல் 58.23 க மீ, மெட்டல் 242 க மீ. ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்றி நன்றாக அழுத்திய பிறகு அடுத்தடுத்த பணிகள் செய்ய வேண்டும். இது தான் பணிகளுக்கான விதிமுறைகள். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கவனிக்க சாலை பொறுப்பு அதிகாரி உதவி பொறியாளர் வேல்முருகன் நியமிக்கப்பட்டார்.

ஒரு மாதம் முன்பு பணிகள் முடிந்து பதாகைகளும் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையில் கப்பிய காணும் ஒரே மாதத்தில் உடைந்து பல்லை காட்டுகிறது. ஆனால் சாலை பணிகள் தரமாக நடப்பதாக பொறுப்பு பொறியாளர் களப்பணியில் சொல்லி பணத்தையும் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால் அந்த சாலையில் மக்கள் தான் போக முடியாமல் தவிக்கிறார்கள். பல முறை விபத்து காயம் என்று சொல்லும் கிராம மக்கள்.. ரோடு போடாம இருந்தப்ப பேசாம போனோம் இப்ப இத்தனை கோடிகளை எங்க ஊருப் பேரைச் சொல்லி திண்ணுட்டு எங்கள படுகுழியில தள்ளுறாங்களே நியாயமா தம்பி.. அரசாங்க அதிகாரியும் தரமான சாலைனு சொல்லிட்டாராம்.

10 இடத்துல உடைந்து கிடக்கு. எந்த இடத்தில் தோண்டினாலும் மண்ணு தான் வருது.. கையால தோண்டலாம் கப்பி கிராவல் எல்லாம் எங்கன்னு அதிகாரிகள் தான் சொல்லனும்.

சில நாளைக்குள்ள அழியாநிலைகிட்ட சாலை மறியல் செய்யப் போறோம் அப்ப வந்து அதிகாரிகள் ரோட்டை பார்த்துட்டு தரமானதானு சொல்லட்டும். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் 40 சதவீதம் கமிசன் கொடுத்துச்சாம். கமிசனை கொடுங்க எதையோ கொடுங்க. எங்க ஊரு ரோடு நல்லா இருக்கனும் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT