sugar

Advertisment

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகை பாக்கியான 56 கோடியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது.

பணம் தராமல் இழுத்தடித்து வருவதால் கரும்புக்காக வங்கியில் வாங்கிய கடன் தொகையை கூட கட்ட முடியாமலும், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நிலுவைத்தொகையை உடனே வழங்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு நிலுவை தொகை பாக்கியை 15 நாட்களுக்குள் வழங்குவதாக, சர்க்கரை ஆலை நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.