ADVERTISEMENT

சூறைக்காற்றால் கடலில் மூழ்கிய படகுகள்... நிவாரணம் கோரும் மீனவர்கள்!

03:56 PM May 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


பலமான சூறைக்காற்றால் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகளும், விசைப்படகுகளும் ஒன்றோடொன்று மோதி கடலில் மூழ்கியதால், சேதமடைந்த தங்களது படகுகளுக்கும், வலைகளுக்கும் நிவாரணம் கோரியுள்ளனர் ராமேஸ்வரம் தீவுப்பகுதி மீனவர்கள்.

ADVERTISEMENT


அம்பன் புயலின் தாக்கத்தால் ஞாயிற்றுக்கிழமையன்று ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு மக்களிடையே அறிவுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளான ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சூசையப்பர் பட்டினம் பகுதிகளில் நேற்றிரவு 11.00 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது.


இதனால், மரங்கள் பல இடங்களிலுள்ள மின்கம்பத்தில் விழுகவே இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதே வேளையில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளின் நங்கூரம் அறுபடவே அங்கிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அது போல், தீவுப்பகுதிகளில் உள்ள அனைத்து படகு நிறுத்தும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தும், படகுத்தளங்களில் உள்ள விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தும் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளன.


இதனை மீட்கும் பணியில் அப்பகுதியிலுள்ள மீனவர்கள் போராடி வருகின்றனர். "தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்துக் கொடுக்காததே படகுகள் சேதம் அடைவதற்குக் காரணம் என்றும் சேதமடைந்த படகுகளுக்கும், வலைகளுக்கும் அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தனர் தீவுப்பகுதியிலுள்ள மீனவர்கள். சூறைக்காற்று காரணமாக விசைப்படகு ஒன்று கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ள பாறையில் மோதி கவிழ்ந்து நிற்பதை இப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கைப் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT