ADVERTISEMENT

திருச்சி தேமுதிக வேட்பாளரின் தற்போதைய நிலை இது தான் !

04:27 PM Mar 24, 2019 | Anonymous (not verified)

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருச்சி எம்.பி.தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் அவைத் தலைவர் தர்மபுரியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இ.பி.எஸ்.ஊரை சேர்ந்த இவர் நீங்க போய் நில்லுங்க எல்லாம் அங்க உள்ள மந்திரி மா.செ. பாத்துக்குவாங்க சொல்லி அனுப்பி வச்சிருக்காங்க. திருச்சிக்கு முதல் முதலாக வரும் போதே வரவேற்க கூட்டணி கட்சியினர் யாரும் இல்லாமல் தனியே வந்து இறங்கி அதன் பிறகு கூட்டணி கட்சியினரை போய் சந்தித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி அரசு மருத்துவனை அருகே இன்று கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இன்று காலை திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தனர். காலையிலே தனி ஆளாக ஆஜர் ஆனார் வேட்பாளர். அதன் பிறகு 10.30 பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வந்தனர். 10.40க்கு முன்னாள் அமைச்சர் 5 பேருடன் தனியாக காரில் வந்தார். 10.50 பிஜேபி மாநில அமைப்பு செயலாளர் ஆஸ்போர்டு சுப்ரமணியன் தனிய ஆளாக வந்து சேர்ந்தார். 10.55க்கு அ.தி.முக. மா.செ. குமார் தன் படைகளுக்கு சரசரவென்று உள்ளே நுழைந்தார். 11.05க்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன். அமைச்சர் ஆகியோர் வந்து இறங்கினார். வந்து இறங்கும் போதே 11.30 மணிக்கு தானே திறப்பு விழா என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

வந்த கூட்டணி கட்சியினர் அனைவரையும் வேட்பாளர் இளங்கோவன் வெளியே வந்து வரவேற்று அழைத்து சென்றார். இப்படி எல்லோரும் வந்தவுடன் மா.செ. குமார் உடனே திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து அடுத்த 5 நிமிடத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கையில் ரிப்பன் வெட்ட சொல்லி அடுத்து குத்து விளக்கு என திறப்பு விழாவை முடிந்தனர்.

வேட்பாளர் திருச்சிக்கு வந்து 5 நாட்களில் மட்டும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தரப்பில் மட்டும் 10 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நடத்தின அத்தனை நிகழ்ச்சிகளுக்கு இவரே தன் கையில் இருந்து செலவு செய்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள் வேட்பாளரை நெருங்கி தேர்தல் செலவுக்கு எப்போ பணம் தருவீங்க என்று கேட்க, உங்களுக்கு உங்கள் அமைச்சர்கள், மற்றும் மா.செ. தான் பொறுப்பு அவுங்க கிட்ட கேளுங்க, என்று சொல்லிவிட்டார். இது தொடர்பாக திருச்சி அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி அதேபோல் புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் பணத்தை வெளியே எடுக்கவில்லையாம்.

கட்சியின் திறப்பு விழாவிற்கு அனைத்து கட்சியினரை அழைப்பதற்கே தேமுதிக வேட்பாளருக்கு போது போதும் ஆகி விட்டதாம். இப்பதான் ஆரம்பிச்சிருக்கு இன்னும் 25 நாள் இருக்கே என்ன பண்ண போறோம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். லோக்கல் அமைச்சர் வெல்லமண்டி தன் வட்ட செயலாளர்களை அழைத்து முதல் கட்டமாக 5,000 ரூபாய் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். கட்சிக்காரர்கள், திருச்சி எம்.பி. தொகுதியில் 3 அமைச்சர்கள், 2 எம்.பிகள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தில் களத்திற்கு வந்த தேமுதிக வேட்பாளரின் நிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது என்கிறார்கள் தேமுதிக தீவிர தொண்டர்கள்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நாளை நடக்கிறது. அதன் பிறகு எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறார்கள் கட்சியினர். இது தான் தற்போதைய திருச்சி தேமுதிக வேட்பாளரின் நிலை !

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT