Skip to main content

திமுக கூட்டணியுடன் ஐக்கியமாகப்போகும் தேமுதிக...?

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் களம் இறங்கி வருகிறார்கள். இதில் ஆளுங்கட்சியினர் திடீரென பாமகவை இழுத்து ஏழு பாராளுமன்ற தொகுதிகளைகொடுத்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார்கள். அதுபோல் எதிர்கட்சியான திமுகவும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பத்துதொகுதிகளை ஒதுக்கி விட்டு மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளருமான நடிகர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில்,விஜயகாந்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும்,ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். 

 

 

dmdk

 

அதுபோல் அரசியல் கட்சி பிரமுகர்களும் விஜயகாந்தை சந்தித்து வருகிறார்கள். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில்  ஆளுங்கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதற்காக பேசிவருகிறார்கள். அதேபோல் திமுகவும் தங்கள் கூட்டணியில் விஜயகாந்தை இழுப்பதற்கும் பேசிவருகிறார்கள்.

 

 

 

இதுபற்றி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது.....

 

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதாவும், சுதீஸ்சும் எங்களைப்போல் உள்ள மாவட்ட செயலாளரிடம் கூட்டணி குறித்து  கருத்துகளை கேட்டனர். அப்பொழுது அதிமுகவில் கூட்டணி வைப்பது அவர்கள் சுயநலத்திற்காக நம்மை இழுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக தான் இருக்கும். அதுபோல் பாமகவினரும், தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள். ஏற்கனவே உள்ள கருத்து வேறுபாடுகளை இந்த தேர்தலில் காட்டி நம்மை தோற்கடிக்க வைப்பார்ப்பார்கள்.  எனவே நாம் திமுகவுடன்  கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

 

அதேபோல் திமுகவில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் கருத்து வேறுபாடு பார்க்கமாட்டார்கள். நம் பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் அரவணைத்து போவார்கள். தலைவர் கேப்டனையும் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். அதனால் திமுகவுடன் கூட்டணி வைத்தால் இடைத்தேர்தல் மூலம் திமுக முழுமையாக வெற்றி பெற முடியும். அதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் நாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்த நமக்கு சாதகமாக இருக்கும். எனவே திமுக கூட்டணியில் நாம் சேருவது தான் நல்லது என கூறினோம்.

 

 

இப்படி எங்களை போலவே தமிழகத்தில் உள்ள 59 மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களில் 80 சதவீதம் பேர் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனால் கூடிய விரைவில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் அவர்களும் பேசி  கூட்டணிகுறித்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறோம்.

 

அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சார்பு அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டி கூட்டணி குறித்து கருத்துக்களை கேட்டு தகவல் சொல்ல சொல்லி இருக்கிறார்கள். அதன்அடிப்படையில் சார்பு அணி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க இருக்கிறோம் என்று கூறினார்கள்.

 

 

 ஆக வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் மத்தியிலேயே பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது என்பதுதான் உண்மை!

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.