ADVERTISEMENT

அரசு பள்ளியில் 22 இலவச மடிக்கணினிகள் திருட்டு!

05:45 PM Jul 12, 2019 | santhoshb@nakk…

கடலூர் மாவட்டம் சேப்பாக்கத்தில் உள்ளது அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேல் நிலைப்பள்ளி. அப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வழங்குவதற்காக, தமிழக பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட 179 மடிக்கணினிகள் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதில் 140 மடிக்கணினிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பின்னர் மீதமுள்ள 39 மடிக்கணினிகள் பள்ளியில் உள்ள கணினி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த அறைக்கு காவலாளியாக கலியன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் அறை முன்பு இருந்து மடிக்கணினி இருந்த அறையை கண்காணித்து வந்தார். அதே போல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலியன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தது. அவர்கள் திடீரென கலியன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

பின்னர் கணினி அறையை திறந்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 22 மடிக்கணினிகளை மட்டும் திருடிச்சென்று விட்டனர். இது பற்றி கலியன் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தேவசேனா வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளியில் முகமூடி அணிந்து மடிக்கணினிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT