ADVERTISEMENT

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை அமைச்சர் சம்பத் வழங்கினார்! 

11:08 AM Jul 05, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 01- ஆம் தேதி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளிகளுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும், லேசான காயமடைந்த தொழிலாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அதன்படி, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆகியோர் என்.எல்.சி. நிறுவன விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சத்துக்கான காசோலையை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினர். இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார்- ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT