cuddalore district neyveli nlc incident employees

Advertisment

என்.எல்.சி. விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆகி உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையத்தில் ஜூலை 1- ஆம் தேதி அன்று காலை பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 2 இளநிலை பொறியாளர்கள், 8 ஒப்பந்தத் தொழிலாளர்கள், 2 நிரந்தரத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் என்.எல்.சி. பாய்லர் விபத்தில் படுகாயமடைந்த ஒப்பந்த ஊழியர் அனந்தபத்மனாபன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.