ADVERTISEMENT

ஐந்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் கிராமம் முழுவதும் பரிசோதனை செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்!

12:15 PM Jun 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் நபர் சென்னையில் பணிபுரிந்து விட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இக்கிராமத்துக்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

அந்நபர் கிராமத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டும் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு, காலதாமதமாக சம்மந்தப்பட்ட நபரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தில் உள்ள ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டதால், அவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பங்கள் பல நாட்களாக தொற்றுடன் இருந்திருக்கலாம் என்றும், ஆதலால் இக்கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று விருத்தாச்சலம் முத்தாண்டிகுப்பம் சாலையில் அமர்ந்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊமங்கலம் காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT