ADVERTISEMENT

உறுப்புக் கொடியை ஆலமரத்தில் தொங்கவிடும் அவலம்! மாபெரும் சுகாதாறக்கேடு!!!

03:45 PM Nov 04, 2019 | Anonymous (not verified)

மாடுகள் கருதறித்தவுடன் கரு வளர்ச்சி பெற்று தாயின் கற்ப்பபையில் வளரும் போது கன்றின் பாதுகாப்புக்கு அதை சுற்றி சவ்வு போன்ற தோலால் போற்த்தப்பட்டிருக்கும் ஒருவிதமான போர்வையை உறுப்புக் கொடி என்பர். தாய் கன்றை ஈன்றவுடன் சுமார் 15 நிமிடங்களில் உறுப்புக்கொடி தனியாக பிறபு உறுப்பிலிருந்து வெளிவரும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அந்த உறுப்புக் கொடியை மாட்டின் உறிமையாளர் பத்திறப்படுத்தி வைக்கோல் பிரிகளுக்குள்ளோ அல்லது நைலான் பைகளிலோ கட்டி ஏறிக்கறையோரம் உள்ள ஆலமரத்திலோ அல்லது அரசமரத்திலோ தொங்கவிடுவார்கள். அப்படி மரத்தில் தொங்கவிட்டால் மாடு அதிக பால்கறக்கும் என்கிற ஒரு நம்பிக்கை.

மரத்தில் கட்டப்பட்ட உறுப்புக் கொடியானது நாள் கணக்கில் தொங்குவதால் அதில் நொதிகள் ஏற்பட்டு புழுக்கள் உண்டாகி பல்வேறு விதமான தொற்று நோய்கள் காற்றின் மூலம் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் குளக்கறையில் தொங்குவதால் உறுப்புக் கொடியில் இருந்து ஒழுகும் விஷநீரானது குளத்தில் உள்ள நீரில் கலந்து குளத்து நீரும் விஷத்தமையானதாக மாறும். இதனால் குளத்து நீரை மனிதன் பயன்படுத்தினாலோ அல்லது மாடுகள் குடித்தாலோ தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த சுகாதாரமற்ற நிலையை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

கன்று ஈணும் மாடுகளுக்கு நல்ல புல்லும், சத்தான தீவனமும் கொடுத்தாலே அதிகமான பால் சுறக்கும். மரத்தில் உறுப்புக் கொடியை கட்டினால் பால் சுறக்கும் என்பது மூட நம்பிக்கையாகும்.

இது போன்ற மனிதத் தவறுகளால் மனிதர்கள் சுவாசிக்க ஆக்சிசனை தரும் ஆலமரம் , அரசமரம் அசுத்தமாகிறது. ஆலமரத்தின் விழுதுகளின் வேர்கள் பல்துலக்க மற்றும் மருத்துவத்திற்கு பயன்படும் மருத்துவகுணம் உள்ள மூலிகை மாசுபடுகிறது.


மாடுகளின் வயிற்றிலிறுந்து வெளியேற்றப்படும் உறுப்புக் கொடியை கொல்லைப் புறத்தில் 5 அடி ஆழத்தில் குழி தோண்டி அதில் கல் உப்பு ஒரு கிலோ (சோடியம் குளோரைடு) இட்டு உறுப்புக் கொடியை அதில் போட்டு மண்ணால் மூடிவிடவேண்டும். நாளடைவில் அந்த கழிவுகள் மண்ணில் செறிக்கப்பட்டு எருவாகிவிடும்.

தமிழ்நாடு சுகாதாறத் துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒவ்வொரு ஊரிலும் உறுப்புக் கொடியை தொங்கவிடும் இடங்களை கண்டறிந்து அவைகளை அப்புறப்படுத்துவதோடு. தொற்றுநோயை உண்டாக்கும் இது போன்ற செயலை யாரும் செய்யக்கூடாது என கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.ஞானமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT