Skip to main content

"பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர முன்வர வேண்டும்" -நல்லுசாமி 

 

trichy nallusamy talks about milk consumer increase buying rate 

 

தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி நேற்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அதில்  உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கொடுத்த திருத்தப்பட வேண்டியது. அதற்கு காரணம் கர்நாடக அரசு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டும் தண்ணீர் விட வேண்டும் என்று கூறி அதில் 284.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவிற்கும், 177.25டிஎம்சி தண்ணீர் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கும் 21டிஎம்சி தண்ணீர் கேரளாவிற்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு இதுவரை தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வாய்க்காலாகவே கருதுகிறதே தவிர. அவர்கள் நமக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எனவே மாதந்தோறும் நீர் பங்கீடு என்பதை, நாள்தோறும் நீர் பங்கீடு கொண்டுவர. வேண்டும். எனவே அதற்கு தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

 

அதேபோல் பூரண மதுவிலக்கு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அரசியல் தலைவர்கள் கள் பூரண மதுவிலக்கில் உள்ளதா. இல்லையா என்று கூற வேண்டும் கள் ஒரு போதை பானம் என்று சொல்பவர்கள் கள் இயக்கத்துடன் விவாதிக்க முன்வர வேண்டும். ஒருவேளை கள் ஒரு போதை பானம் என்று உறுதி செய்தால், கள் இயக்கம் எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து விலகி கொள்வோம். அதே சமயம் அதை நிரூபிப்பவர்களுக்கு 10 கோடி ரூபாய் அன்பளிப்பும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ததில் கிலோவிற்கு 1 ரூபாய் வீதம் லஞ்சமாக பெறப்பட்டது உண்மை தான் என்று கூட்டுறவு. துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். எனவே தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் ஒன்றிய அரசானது இந்தியாவில் 69 சதவீதம் பாலில் கலப்படம் உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது. எனவே கலப்படத்தை தடை செய்தும், கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே நோய் பாதிப்பு இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். அதிக அளவில் கலப்படம் செய்வது தான், பல நோய்களுக்கு ஆதார மாத உள்ளது. தென்னை மரத்திலிருந்து நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் இந்த நீரா என்ற பானத்தில் எந்தவித கலப்படமும், நிறமிகளும், பதப்படுத்தும் கெமிக்கல்கள் என எதுவும் கலக்கவில்லை. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உள்ளது. எனவே அவற்றை தளர்த்தி நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க முன்வர வேண்டும்.

 

தற்போது பால் கொள்முதல் எடுத்துக்கொண்டால் சொசைட்டியில் 1லி பசுமாட்டு பால் ரூ.31க்கு கொள்முதல் செய்கிறார்கள். அதே பாதை தனியார், ரூ.40க்கு கொள்முதல் செய்கிறார்கள். எருமை பாலை 1லி ரூ.44க்கு சொசைட்டி, கொள்முதல் செய்கிறது. தனியார் ரூ.60க்கு கொள்முதல் செய்கிறது. இப்படி பட்ட நிலை தொடர்ந்து நீடித்தால் ஆவின் நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை உருவாகும். எனவே அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர முன்வர வேண்டும். மேலும் பனை, தென்னை,ஈச்சம் மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு பண்டங்களாக மாற்றி அதை கொண்டு பொருளாதாரத்தை பெருக்கினால் அரசிற்கும் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே இந்த கோரிக்கைகளை அரசு செயல்படுத்திட முன்வர வேண்டும். கள் என்பது போதை பானம் அல்ல. அது ஒரு உணவு பொருள் என்பதை அரசு உணர்ந்திட முன்வர வேண்டும். 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம் என்றார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !