ADVERTISEMENT

லஞ்சம் பெற்ற அரசு ஊழியருக்கு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்! 

12:46 PM May 20, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி லிங்கம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள பணிக்கம்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இவர் விவசாய பணிகளுக்காக மானிய விலையில் ட்ராக்டர் வாங்குவதற்காக கடந்த 2019ம் ஆண்டு குளித்தலை வேளாண் பொறியியல் உதவி பொறியாளர் கார்த்திக்கை (29) அணுகியபோது, ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தர முடியாது என மறுத்த சுரேஷ். பின் முதல் கட்டமாக ரூ.22,500 லஞ்சம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் இதுகுறித்து, கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து குளித்தலை வேளாண் பொறியியல் அலுவலகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவ. 5ம் தேதி உதவி பொறியாளர் கார்த்திக்கிடம், சுரேஷ் ரூ.22,500 லஞ்சம் வழங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கார்த்திக்கை கைது செய்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் இன்று வழங்கிய தீர்ப்பில், வேளாண் உதவி பொறியாளர் கார்த்திக்கிற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேற்கொண்டு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT