ADVERTISEMENT

ஆஜராகும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இனி வெள்ளை உடைதான்!- தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு!

07:31 AM May 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராகும் அனைத்து வழக்கறிஞர்களும் இனி வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும் எனத் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, கரோனா வைரஸை ஈர்க்கும் தன்மை கருப்பு நிற அங்கிக்கு இருப்பதால், வழக்கறிஞர்கள் உடை மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிர்வாக உத்தரவின் காரணமாக, உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம், தீர்ப்பாயம், ஆணையங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இனி கருப்பு அங்கிகள்/புடவை அணிவதைத் தவிர்த்து, ஆண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிறச் சட்டையும், பெண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிறப்புடவையும், சல்வார் கமீஸும் அணிந்து பங்கேற்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை கருப்பு நிற அங்கிகள் அணிவதைத் தவிர்த்து, புதிய உத்தரவைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT