ADVERTISEMENT

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கரோனா!!! சென்னையில் 20 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு!!

06:27 PM Jun 05, 2020 | kalaimohan


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசுகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT


இன்று தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 1,438 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 1,045 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.

1,116 என இன்று சென்னையில் மூன்றாம் நாளாக ஆயிரத்தை கடந்து கரோனா பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் தற்போதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,809 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் ஒரே நாளில் என்று 12 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. ஆறாவது முறையாக இரட்டை இலக்கத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.


அதேபோல் தமிழகத்தில் இன்று கரோனாவிற்கு சிகிச்சை பெற்று 861 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762 ஆகும். இதுவரை தமிழகத்தில் 5,60,673 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 15,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பாதிப்புகளை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டு வருகிறது. இறப்பு, பரிசோதனைகளை குறைத்து சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. ஆதாரம், புள்ளி விவரங்களை கூற வேண்டும். கரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. தனியார் பரிசோதனை மையங்களுக்கு கட்டணத்தை 3,000 ஆக குறைத்துள்ளோம். ஐ.சி.எம்.ஆர். 4,500 ரூபாய் நிர்ணயித்த நிலையில் தற்போது நாங்கள் 3000 ஆகக் குறைத்துள்ளோம் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT