ADVERTISEMENT

அதிகரிக்கும் தினசரி கரோனா பாதிப்பு... தமிழகம்,கர்நாடகாவிற்கு மத்திய அரசு அலெர்ட்!

06:39 PM Sep 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஓரளவிற்குக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றும் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 32,803 கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே கேரளாவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினால் மட்டுமே கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழக மற்றும் கர்நாடகச் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் தொலைப்பேசியில் இந்த அறிவுறுத்தலைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றுதான் தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT