ADVERTISEMENT

கரோனா எதிரொலி; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? - குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம்!

05:45 PM Mar 24, 2020 | Anonymous (not verified)

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படும் என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT