ADVERTISEMENT

கரோனா: டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க புதிய செயலி அறிமுகம்!

05:29 PM May 12, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊரடங்கு பிறப்பித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,002 ஆக உள்ளது. சென்னையில் ஒரேநாளில் 538 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதிசெய்யபட்டதால், சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 2,051 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் சென்னையில் டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க 'GCC Vidmed' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய செயலியை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சைக்கு புதிய செயலியில் காணொலி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT