ADVERTISEMENT

அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமாருக்கு கரோனா!

03:22 PM Jan 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் வடகுத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT