ADVERTISEMENT

தமிழகத்தில் 911 பேருக்கு கரோனா... 9 பேர் உயிரிழப்பு-தலைமை செயலர் தகவல் 

06:45 PM Apr 10, 2020 | kalaimohan

தமிழக தலைமை செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,

ADVERTISEMENT


தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். கடந்த 24 மணிநேரத்தில் பரிசோதனைக்கு வந்த 71 பேருக்கு தொற்று எதுவும் இல்லை. தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு பரவி உள்ளது.

ADVERTISEMENT



இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள். அத்தியாவசிய பொருட்களை கிடைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை பிரதமருடன் கூடிய காணொளி சந்திப்பு நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு முதல்வர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பேசி, இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.

கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 இருந்து 9 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த 73 வயது பெண் கரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளார். கரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திற்கு கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு மேலும் 314 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நிதிக்காக மத்திய அரசை மட்டும் நம்பாமல், மாநில அரசின் நிதியையும் பயன்படுத்தி வருகிறோம். அதேபோல் தமிழகத்தில் மொத்தம் 44 பேர் கரோனா உறுதியாகி இதுவரை குணமடைந்துள்ளனர் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT