ADVERTISEMENT

"இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

09:15 PM Feb 18, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (18/02/2022) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் பேசிய கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தப்படும். மக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (18/02/2022) வெளியிட்டியிருந்த அறிக்கையில், "கேரள சட்டமன்றத்தில் இன்று (18/02/2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது 07/05/2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்சநீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.

இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எல்லா விதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT