ADVERTISEMENT

மருத்துவபடிப்பிற்கான கலந்தாய்வு: சேர்க்கை ஆணையை வழங்கிய சுகாதார துறை செயலாளர்! (படங்கள்)

12:38 PM Jan 28, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வு இன்று முதல் துவங்கியது. முதல் நாளான இன்று அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணையை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

ADVERTISEMENT

அந்த வகையில் இன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்புப்பிரிவினர் கலந்தாய்வில் 71 எம்.பி.பி.எஸ்., 2 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரம்பின. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவகல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள், 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT