ADVERTISEMENT

"பான் கார்டுடன்" ஆதார் எண்ணை இணையதளம் மூலம் இணைக்கலாம் !

12:27 PM Mar 18, 2019 | Anonymous (not verified)

பான் கார்டுடன் (PAN CARD) ஆதார் எண்ணை இணைப்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சென்றால் வருமான வரியை செலுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது. இதனால் ஒருவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் போது அவர் மற்ற வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளரா? எனவும் , எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளார்? என்பதை வருமான வரித்துறையினர் எளிதாக ஆராயும் வகையில் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை வைத்து இணையதளம் மூலம் கண்டறிய முடியும். இதற்காகவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் புதிதாக வங்கி கணக்கை (New Bank Account Opening) தொடங்கும் போதும் ஆதார் அட்டையாள அட்டை நகல் மற்றும் பான் கார்டு நகல் வங்கியில் அளித்தால் மட்டுமே புதியதாக வங்கி கணக்கு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதள முகவரி : https://www.incometaxindiaefiling.gov.in/home ஆகும் . இந்த இணையதளத்தை பயன்படுத்தி பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் , ஆதார் அட்டையில் உள்ள பெயரை குறிப்பிட்டு "SUBMIT" செய்தால் "ஆதார் எண் " இணைந்தது என இணையதளத்தில் காட்டும். இதில் பான் அட்டையில் உள்ள பெயர் , பிறந்த தேதி உட்பட அனைத்து தகவலும் ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான தகவல்கள் இருக்க வேண்டும். அப்போது தான் பான் அட்டையில் ஆதார் எண் (Adhaar Number link to Pan Card ) இணையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ADVERTISEMENT

இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்தால் இணைய தள முகவரி : https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html சென்று பான் எண் மற்றும் ஆதார் எண்ணை குறிப்பிட்டால் இணைந்துள்ளதா? இல்லையா ? என்பதை பார்க்கலாம். தமிழக கிராமப்புற மக்களுக்கு இத்தகைய இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் எளிதான முறையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இதற்காக இளைஞர்கள் தங்கள் பகுதியில் குழு அமைத்து மக்களின் இல்லத்திற்கே சென்று "Android Mobile" யை பயன்படுத்தி இணைக்கலாம். இதனால் அனைவரும் "பான் எண்ணுடன்" ஆதார் எண்ணை இணைப்பது உறுதி செய்யப்படும். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை மக்கள் தவறாமல் செலுத்துவோம் என அனைவரும் உறுதியேற்போம். இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.


பி.சந்தோஷ் ,சேலம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT