ADVERTISEMENT

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்!

11:53 AM Sep 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்தியில் ஆளூம் மோடி அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்காதே என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டமானது சோனியா காந்தியின் உத்தரவுப்படி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, செயல் தலைவர் டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் ஆகியோரின் ஆணைக்கிணங்க இன்று (20.09.2021) ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குறிஞர் எம். சரவணன் இல்லத்தின் முன்பு கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் முரளி, கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், பொதுச் செயலாளர்கள் மைதீன் திம்மை, செந்தில்குமார், நிர்மல் குமார், வார்டு தலைவர் சக்தி முருகன், தியாகராஜன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT