ADVERTISEMENT

மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசு; கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

10:19 AM Feb 09, 2024 | ArunPrakash

ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகள் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பதும், போதிய நிதி வழங்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பதும், அரசமைப்பு சட்ட விழுமியங்களை மீறுவதும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற நாசகர வேலைகளை ஒன்றிய மோடி அரசு செய்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி அரசுகளை செயல்படாமல் முடக்கம் செய்து வருகிறது என்று இதனை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகே நேற்று(8.2.2024) நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்.

ADVERTISEMENT

மாநகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆர்.அமர்நாத், ஆர்.பஞ்சாட்சரம், எம்.சிவானந்தம், எம்.பி. தண்டபாணி, ஆர். உத்திராபதி, எஸ். கே.ஏழுமலை, எம். ஜெயபாண்டியன், எஸ்.கே.பக்கீரான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், வி. உதயகுமார், எம். மருதவாணன், பி. கருப்பையன், வி.சுப்பராயன், ஆர். ராமச்சந்திரன், எஸ்.திரு அரசு, என்.எஸ். அசோகன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், பி. தேன்மொழி, ஜெ.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, அவைத் தலைவர் பழனிவேல், மதிமுக மாவட்ட செயலாளர் என். ராமலிங்கம், திமுகவைத் தலைவர் பழனிவேல், விடுதலை சிறுத்தை கட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர செயலாளர் செந்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.எஸ். சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர் தமிழக வாழ்வு கட்சியின் அருள் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் வி.குளோப், திராவிட கழகத்தின் எழிலேந்தி, தமுமுக மாவட்ட செயலாளர் ரஹீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT