ADVERTISEMENT

போடியில் ஓபிஎஸ், டி.டி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே போஸ்டர் யுத்தம்!

04:47 PM Aug 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்தான் போடி சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இருந்தாலும் ஒபிஎஸ்சை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுவை சேர்ந்த தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ் செல்வன்தான் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு ஆக்டிங் எம்.எல்.ஏ.வாக தொகுதியில் செயல்பட்டு வருகிறார்.

அதைக்கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் மேல் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போடியில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒபிஎஸ் நடத்திய கண்டன போராட்டத்தின் போது தங்கதமிழ்செல்வனை தாக்கி பேசியதுடன் மட்டும்மல்லாமல் தகரம் என்றும் ஒ.பி.எஸ்.கிண்டல் அடித்து பேசினார். அதைத்தொடர்ந்து போடியை சேர்ந்த சரவண நதி மற்றும் நகர அதிமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வனை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜெ.கையில் வால் இருப்பது போல் பெரிய படத்துடன் ஒபிஎஸ்-இபிஎஸ் மற்றும் ஒபிஆர் படங்களையும் போட்டு "அம்மாவின் அரசியல் வாரிசு, மூன்று முறை தமிழக முதல்வர் போடி கண்டெடுத்த பொக்கிஷம், போடியை சொர்க்க பூமியாக மாற்றிய ஏலம் மணக்கும் போடியின் காவலர் ஓ.பன்னீர் செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தனி மனித நாகரிகம் தெரியாமல் அவதூறாக பேசிய மூன்று கட்சி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வனை வன்மையாக எச்சரிக்கையுடன் கண்டிக்கிறோம்" என நகர் முழுவதும் கண்டன போஸ்டரை ஒட்டினார்கள்.

இந்த விஷயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான போடி முன்னாள் நகர செயலாளர் ரமேஷ் பாபு காதுக்கு எட்ட, அதேபோல் கையில் வாலுடன் முதல்வர் ஸ்டாலின் படத்தை போட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் டிடிஎஸ் படத்தையும் போட்டு "மிக வன்மையாக கண்டிக்கிறோம், தர்மயுத்தம் என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிய சுயநலவாதி ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் மக்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் தங்கம் என்றும் தங்கமே''என போஸ்டர் அடித்து நகர் பகுதி மட்டும்மல்ல தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். இப்படி ஓபிஎஸ்,டிடிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் வால் போஸ்டர் உத்தம் தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT