கடந்த சில வாரமாகவே தங்க தமிழ்செல்வனுக்கும், தினகரனுக்கும் மோதல் அதிகமாகி விட்ட நிலையில், அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது. இன்று தினகரன் சில முக்கிய முடிவுகளை எடுக்க கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசுகிறார். தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க எடப்பாடி தரப்பு சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் அமைச்சர் தங்கமணி மூலம் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு அதிமுகவில் இணைய பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

Advertisment

admk

இதில் அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் , தினகரனுக்கும் செக் வைக்க சரியான நபராக தங்க தமிழ்ச்செல்வன் இருப்பர் என்று எடப்பாடி தரப்பு கருதுகிறது. எந்த நேரமும் முதல்வர் எடப்பாடியை சந்திக்க தயாராக இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுகவில் சமீப காலமாக ராஜ்யசபா சீட் யாருக்கு கொடுக்கலாம் என்று இருந்த நிலையில் அந்த லிஸ்டில் தங்க தமிழ்செல்வனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.