ADVERTISEMENT

கொளுத்தும் கோடை வெயில்; மது விற்பனையாளருக்கு நேர்ந்த துயரம்

02:43 PM Apr 17, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் (வயது 45). தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் மது விற்பனையின் போது நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட 10 ரூபாய் அதிகம் வசூலித்து பின்னர் காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைத்து 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி வழக்கம் போல் கடந்த வெள்ளிக்கிழமை மது பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதன் காரணமாக அங்கிருந்த ஒரு மது பாட்டில் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் செந்தில்குமாரின் கண், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் கண்ணாடி துகள்கள் செந்தில்குமாரின இடது கண்ணின் கருவிழியைப் பாதித்துள்ளது. சக ஊழியரான சந்திரசேகர் இந்த சம்பவத்தைக் கண்டு பதற்றத்துடன் செந்தில்குமாரை மீட்டு கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் கண்ணாடி துகள்கள் கண்ணின் கருவிழியில் பதித்ததால் செந்தில் குமாரின் பார்வை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடை வெயிலுக்கு மது பாட்டில்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் மதுப் பிரியர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT