ADVERTISEMENT

"சோலி இல்லாமலா சொந்த ஊருக்கு வருவாரு...?" - சொந்தங்களை மகிழ்வித்த எடப்பாடி!

01:00 PM Feb 26, 2020 | Anonymous (not verified)

என்னதான் சென்னையிலிருந்து நாட்டையே ஆண்டாளும் சொந்த ஊருக்கு வந்து பழகின முகங்களை பார்த்தாலே அவருக்கு பரவசம் ஆகுது. பாருங்க முதல்வர் முகத்துல என்ன கலைனு... இப்படி சேலம் ர.ர.க்கள் வியந்து போய் பேசுவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



மாதத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 24 ஆம் தேதி மாலை சேலம் வந்த முதல்வர் எடப்பாடி இரவில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கினார். அதன் பிறகு காலையில் அவரது சொந்த கிராமமான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் தோட்டத்திற்குச் சென்றார். செல்லும் வழியில் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு விசிட் கொடுத்து விட்டுப் போனார். காலையில் சேலம் வீட்டில் பொதுமக்களை சந்திக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்பேரில் ஒரு மூதாட்டி மனு கொடுத்தார். ''என்னம்மா?'' என எடப்பாடி கேட்க, ''வயசானவங்களுக்கு கொடுக்கிற பணமப்பா'' என்று அவர் சொல்ல ''அடுத்த மாதத்திலிருந்து உங்க வீட்டுக்கு பணம் வரும் போங்க'' என சொல்லி அனுப்பினார். எடப்பாடி நேற்று இரவு தனது வீட்டில் தங்கிய எடப்பாடி இன்று காலை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் இல்ல திருமண நிகழ்வுக்கு தஞ்சாவூர் சென்றார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் சொந்த பந்தத்தோடு ஒன்றாக உணவு சாப்பிட்டு ஊர் கதைகளை பேசி மனம் குளிர்ந்து உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ஒருவர், மாப்ளே இங்கு சோலி (வேலை) இல்லாமலா சொந்த ஊருக்கு வருவாரு? என நகைச்சுவையாக பேசினார். மொத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊருக்கு வந்து சொந்தந்தங்களை மகிழ்வித்துவிட்டு தானும் மகிழ்ந்து சென்னை திரும்பினார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT