ADVERTISEMENT

சிமெண்ட், இரும்பு விலை உயர்வை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம்!!

12:33 PM Feb 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிமெண்ட் மற்றும் இரும்பு விலை உயர்வைக் கண்டித்து நாளை (13.02.2021) இந்தியா முழுவதும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், தர்ணா போராட்டமும் நடைபெற உள்ளதாக இந்திய கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தமும் அடையாள தர்ணா போராட்டமும் குறித்து திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கரோனா காலத்திற்குப் பிறகு கட்டுமானப் பொருட்களில் மிக முக்கியமான இரும்பு மற்றும் சிமெண்டின் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இரும்பின் விலை 40 சதவீதமும், சிமெண்டின் விலை 30 சதவீதமும் உயர்ந்துள்ளது. கிலோ 47 ரூபாய்க்கு விற்ற இரும்பு, இன்று 65 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 350 ஆக இருந்தது, இன்று 450 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது எனவே கட்டுமான தொழில் மிகவும் நலிவடைய ஆரம்பித்திருக்கும் நிலையில், இந்த விலையேற்றத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுமானப் பணிகளை வளர்வதற்கு உதவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இந்தியா முழுவதும் சுமார் 47 மையங்களில் இந்தக் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த 47 மையங்களிலும் நாளை அந்தந்த மாநிலங்களில் ஒருநாள் கட்டுமான வேலைகளை நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். திருச்சியில் மட்டும் சுமார் 800 உறுப்பினர்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், நாளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT