ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் அரசியல் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

12:43 AM Dec 22, 2019 | santhoshb@nakk…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் நேற்று (21.12.2019) கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

போராட்டத்தின் போது "திரும்ப பெறு திரும்ப பெறு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு" என்றும் பா.ஜ.க அரசே நாட்டை துண்டாக்காதே என்றும் கோஷமிட்டனர். இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புஞ்சை புளியம்பட்டியில் நேற்று (21.12.2019) ஜமாத் கமிட்டி மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக புஞ்சை புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் இருந்து ஜமாத் கமிட்டி தலைவர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோஷமிட்டவாறே ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷமிட்டனர். இதில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

அதே போல் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோபிச்செட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களிலும் எதிர்க்கட்சியினரும், மற்ற அமைப்பினரும் பங்கேற்ற ஊர்வலமும், ஆர்பாட்டமும் நடந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT